ஞாயிறு, 11 ஜூலை, 2010

என் கனவு மெய்ப்படவேண்டும் ...............

என் கனவு மெய்ப்படவேண்டும் ...............
அமெரிக்க நாட்டின் கருப்பு சிங்கம் மார்டின் லூதர் கிங்

வெள்ளையருக்கு அடிமைகளாக கருப்பு இன மக்கள் பல நூற்றாண்டுகள் இருதார்கள்.
அவர்கள் பட்ட துன்பங்கள் எண்ணத்தில்,எழுத்தில் அடைக்க முடியாதவை. மனித உணர்வுள்ள மனிதர்களால் சகித்துக்கொள்ள முடியாதவை.
ஆப்ரிக்கா கண்டத்தின் இம்மக்களை உலகம் முழுவதுமான வெள்ளையின மக்கள் விலங்குகளை விட கேவலமாக நடத்தினார்கள்.
அமெரிக்க,ஐரோப்பிய நாடுகளின் வீடு மிருகங்களாக கருதப்பட்ட காலமும் இருந்தது உண்டு. அமெரிக்க சரித்திரத்தில் இவர்கள் விட்ட கண்ணீரின்
ஈரம் காய்வதற்கு இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆகும். இவர்களுக்காக முதல் குரல் கொடுத்தவர் ஆபிரகாம் லின்கன். ஆனால் அவர்
சுட்டு கொல்லப்பட்டார்.
அதற்க்கு அடுத்து கறுப்பின மக்களுக்காக போரடியவர்தான் மார்டின் லூதர் கிங். ஒரு கிறிஸ்தவ மத போதகராக "அலபாமாவில்" தன் வாழ்கையை ஆரம்பித்த லூதர்
பின்னாளில் அமெரிக்க அரசுக்கு மிகப்பெரிய சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். ஜனவரி 15 , 1929 ம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள அட்லாண்டா என்ற ஊரில் பிறந்தார் தனது தந்தையை பின்பற்றி “More house college
பட்டம் பெற்ற பின் Boston university
யில் ஆராச்சி படிப்பை
முடித்தார்.
அவரின் மனதை மிகவும் பாதித்தவை நூறு ஆண்டுகளாக நடந்த சுதந்திர போராட்டம் முடிவுக்கு வந்த பின்பும் கறுப்பின மக்கள் இரண்டாம் தர
குடிமக்களாக கருதப்பட்டவைகள்தான். பேருந்துகளில், ரயில் வண்டிகளில்,பொது இடங்களில் இவர்கள் மிகவும் அவமதிக்கப்பட்டர்கள்.
1955 Montgomery என்ற இடத்தில நடந்த ஒரு சம்பவம் இவரை மிகப்பெரிய போராட்ட வீரர் ஆக்கியது. ரோசா பார்க் என்ற பெண்மணி ஓடும் பேருந்தில் வெள்ளையருக்கும் கருப்பினருக்கும்
சமமான இருக்கை வேண்டும் என்ற உரிமைப்போரில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த பெண்மணிக்கு நேர்ந்த அவமானத்தை முன்வைத்து பேருந்து நிறுவனத்தின்மீது நடவடிக்கை,கருப்பு வெள்ளை இனப்பாகுபாட்டுக்கு
முடிவு ஆகிய கோரிக்கைகளை வைத்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார் லூதர். வரலாற்ற்றில் லூதரின் இப்போராட்டம்
பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒன்றாகும்
அமெரிக்க காவல் படையின் மூர்கத்தனமான தாக்குதல்கள் கறுப்பின மக்களின் எழுச்சிக்கு மிகவும் தடையாக இருந்தது. இந்த சமயத்தில் இப்படிப்பட்ட சூழ்நிலையை சமாளிக்க லூதர் கையாண்ட முறை மகாத்மா காந்தியின் அஹிம்சை கொள்கைதான். காந்தியின்,அடக்குமுறைக்கு பயந்துவிடாமல் தாக்குதலை
சமாளிப்பது எப்படி என்பதை லூதரும் தன் போரட்டகொள்கையாக கையாண்டார். இதன் பலன் அவருக்கு உடனடியாக கிடைத்தது. ஆம்!
காவல் துறையின் தாக்குதலை தாங்கிக்கொண்டு போராடும் குழுவினரின் சகிப்புதன்மை அன்றைய பத்திரிகை, புகைப்படங்கள் மூலமாக வெளயுலக்கு தெரியவந்தது. பொது மக்களின் ஆதரவும் கிடைத்தது.
லூதர் கிங் அவர்களின் எழுச்சிமிக்க பேச்சுக்கள் இன்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வீர உரையாக கருதபடுகிறது. 1965 ஆண்டு வியட்நாம் போருக்கு
எதிராக இவர் விடுத்த அறிவிப்புகள் இவரை அமெரிக்க நாட்டின் எதிரியாக கருதப்பட வைத்தது. உண்மையில் இவரது போராட்டம் கருப்பு இன மக்களுக்கு சரி சமமான உரிமை பெற்று கொடுப்பதே ஆகும். இவரின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக FBI இவரை ஒரு கம்யூனிஸ்ட் வாதி என்ற
முத்திரை குத்தி லூதர் அமெரிக்க மக்களின் எதிரி என்று கருதும் நிலையை உருவாகியது. எது எவ்வாறாக இருந்தாலும் இவரின் ஒரே கொள்கை
கறுப்பின மக்களுக்கு உரிய உரிமையை பெற்று கொடுபதுதான்.
1968 ஆண்டு இவர் James Earl Ray என்பவரால் மெம்பிஸ் என்ற இடத்தில் சுட்டுகொல்லபட்டார். இச்சம்பவம் FBI திட்டமிட்ட சதி என்று அன்றும் இன்றும் பேசப்பட்டுவருகிறது. ஆனால் உலகத்தின் பார்வையில் அவர் படுகொலை செய்யப்பட்டுவிட்டார். ஏன்? எதற்காக என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்காது.
1964 ஆண்டு லூதர் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார். கிடைத்த 54000அமெரிக்க டாலரை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக அளித்தவர் லூதர். தனது கருத்துமிக்க பேச்சுக்களால் அமெரிக்க மக்களையும் உலக மக்களையும் ஈர்த்தவர்
லூதர்.

லூதர் கிங் தனது உரைகளில் தனக்கென்று ஒரு கனவு உண்டு அது "ஒரு நாள் அமெரிக்க வெள்ளை இன சிறுவர்களும்,சிறுமிகளும்
அமெரிக்க கருப்பு இன சிறார்களுடன் கைகோர்த்து விளையாடும் காலம் வரவேண்டும்" என்பதாகும்.
அவருடைய கனவு பலித்து விட்டது என்பதற்கு, இன்று அமெரிக்க நாட்டை ஆளும் மனிதர் கருப்பு ஒபாமா என்பதே சாட்சியாகும்.
மார்டின் லூதர் கிங் நமது காந்திஜியின் அஹிம்சை கொள்கையை முன்னிறுத்தி அதற்காக தன உயிரையும் கொடுத்து
கருப்பு இனத்தின் விடுதலைக்கு வித்திட்டு உள்ளார். அவருக்கு முன்மாதிரியாக இருந்த காந்திஜியின் பாரதம் இன்னும் சாதி,மத
பேதங்களால் தினறிக்கொண்டு இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இலங்கை மலையக மக்களின் துயர வரலாறு இக்கட்டுரையில் தெளிவாக புரியவைக்கப்பட்டுள்ளது. தங்களின் இன்றைய சமுதாய நிலை என்ன என்று தெரியாத, தங்கள் வராலாறு தெரியாத நிலைமையில் இருக்கும் இன்றைய மலையக இளைஞர்கள், இக்கட்டுரையின் வாயிலாக தங்களை இனம்கண்டு எதிர்கால முன்னேற்றதுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற முனைப்பை இக்கட்டுரை உணர்த்தும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது வரவேற்கதக்கதே. 200 வருட வரலாற்று நிகழ்வுகளை ஒரே பார்வையில் நம் கவனத்துக்கு கொண்டு வந்த திரு சடகோபனின் முயற்சி பாராட்டுக்குரியதாகும்.
மலையக மக்களின் வாழ்க்கையில் திரு K நடேச அய்யரின் பங்கு பற்றி நாம் அறிந்திராத சில விசயங்கள் இக்கட்டுரை மூலம் தெரிந்து கொள்ளமுடிகிறது.இந்த வலைப்பூவை (blogger ) இன்றைய மலையக இளைய தலைமுறையினர் வாசிக்கும் படியாக அவர்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது முறையானதாகும் எனக்கருதுகிறேன்.
ஒருகோப்பை தேநீரின் சுவைக்குபின்னால் அடங்கிக்கிடக்கும் துயரம் தோய்ந்த ஒரு சமூக பின்னணி நாளைய அவர்களின் வாரிசுக்களுக்கு வெற்றிமாலையாக்கும் என்ற நம்பிக்கையோடு இன்றைய இளைஞர்கள் செயல்படவேண்டும். அதற்கான விழிப்புணர்வு இக்கட்டுரையாளரின் பேனா முனையில் பிறந்திருக்கிறது.
வாழையடி வாழையாக இவர்கள் சமூக நிலைப்பாடு மிகப்பின்னோக்கி சென்றதுக்கு முக்கிய காரணங்களாக நாம் கருத வேண்டிஉள்ளது
என்னவெனில் சரியான தலைமையின்மையும் கல்வியறிவு இன்மையும் தான். 200 ஆண்டுகால சரித்திரத்தில் அவர்கள் திட்டமிடப்பட்டே முன்னேறவிடாமல் தடுக்கப்பட்டுள்ளனர்
என்பது தெளிவாகிறது. சூழ்நிலைகள் காரணமாக இத்தனையாண்டுகள் கையறு நிலையில் அவர்கள் இருந்துவிட்டாலும் இனிவரும்காலங்கள் விழிப்போடு செயல்பட்டு முன்னேற வேண்டியது ஒவ்வொரு மலையக இளைஞனின் கடமையாகும்.
இம்மக்களின் விடிவுக்கு இக்கட்டுரையில் முன்வைக்கும் ஒருகாரணம் அவர்களை தேசிய இனமாக அறிவிக்கப்படவேண்டும் என்பதாகும்.
இன்று இலங்கையில் நாடற்றவர்கள் என்று யாரும் இல்லை என்றே சொல்லப்படுகிறது. வாக்களிக்கும் உரிமை ஒருவர் பெற்று விட்டாலே
ஒரு ஜனநாயக ஆட்சியில் குடியியல் உரிமை அனைத்தும் பெற்றதுக்கு சமம் என்றுதானே அர்த்தம். கட்டுரையாளரின் கூற்றுப்படி இப்பொழுது 50
சதவீத மக்களே தொட்டபயிர்செய்கையில் குறைந்த சம்பளம் பெரும் மக்களாக இருக்கிறார்கள் என்றால் அவர்களின் நியாயமான சம்பளத்தையும்,
மற்ற சமூகங்கள் வாழும் வாழ்க்கைத்தரத்துக்கு சமமான அந்தஸ்தையும் பெற்றுகொடுக்க நிச்சயம் முடியும் என்ற நிலையை வரும் காலங்களில்
நம்மால் உருவாக்க மலையக மக்களை தயார்படுதவேண்டியது பொறுப்புள்ள அரசியலார்கள்,ஊடகவியலார்கள் மற்றும் மலையக இளைஞர்களின் பொறுப்புமாகும்.
இன்று ஸ்ரீலங்கா tea என்ற காப்புரிமை பெற்று சர்வதேச சந்தையில் அதனை விற்று கணிசமான் இலாபமீட்டிவரும் இலங்கை அரசு, அதற்க்கு முதுகெலும்பாக உழைக்கும்
தோட்ட தொழிலாளர்களின் முறையான சம்பளத்துக்கு வழிவகை செய்யாமல் அவர்களை கொத்தடிமைகளாய் நடத்துவது சர்வதேச மனிதஉரிமை மீறலாகவே கருதப்படவேண்டும்.
இலங்கை தேயிலையை வாங்கும் ஐரோப்பிய மற்றும் உலகநாடுகளின் செவிகளில் நாம் சற்று உரக்க
சங்காக ஊதவேண்டும். அவர்களுக்கு இதன் பின்னணி என்ன என்பதை உணர்த்தவேண்டும்.
இன்று இலங்கை போர்குற்றம் புரிந்த ஒருநாடு என்ற குற்றசாட்டுக்கு இலக்காகி ஒரு இக்கட்டான நிலைக்கு
தள்ளபட்டதின் காரணம் நமக்கெல்லாம் தெரிந்ததுதான். இதன் காரணமாக gsp என்ற சலுகையை இலங்கை
இழந்துள்ளது. இவைகளெல்லாம் எப்படி சாத்தியமானது என்பதை கவனித்து அவ்வழியில் நாமும் செல்லலாமே.
எனவே உலக அளவிலான பார்வைக்கு நாம் நம் பிரச்சினையை கொண்டுசெல்லவேண்டும். அதற்கான
முயற்சியை இன்றைய இலங்கை மலையக மக்களின்
அரசியல் பிரதிநிதிகள்,தொண்டுநிறுவனங்கள், பத்திரிகையாளர்கள் அடங்கிய கூட்டமைப்புகள் கண்டிப்பாக செய்யவேண்டிய
நிர்பந்தம் இன்ற ஏற்பட்டு உள்ளது.
அடுத்தது தோட்டங்களை விட்டு வெளியேறிய இளைஞர்கள் தாங்கள் பெற்ற அனுபவங்களைகொண்டு சிறு நில உரிமையாளர்களாக
மாறி அந்நிலங்களில் பால்பண்ணை,மூலிகை பயிர்வளர்ப்பு, மற்றும் விவசாய முயற்சிகளில் இறங்கலாம். இதற்கான அரசு உதவிகளை
இதற்கென அமைந்துள்ள அமைப்புகள் செய்து கொடுக்கவேண்டும்.
படிப்படியாக இச்செயல்கள் அமையுமாயின் மலையாக மக்கள் காலமாற்றத்தில் தேசிய இனமாக மாறிவிடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
திரு சடகோபனின் பேனா இதுபற்றி இன்னும் எழுதும் என எதிர்பார்கிறேன்.
இராமச்சந்திரன்
திருச்சி தமிழ்நாடு
ஈமெயில்: thamill45 @yahoo .co .in